Showing posts with label Screening of Sivaji Ganesan Films in Theatres. Show all posts
Showing posts with label Screening of Sivaji Ganesan Films in Theatres. Show all posts

Saturday, January 3, 2009

நடிகர் திலகத்தின் படங்களைத் திரையரங்குகளில் மீண்டும் காண முடியுமா

வணக்கம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பண்டிகைக் கால நல்வாழ்த்துக்கள். சிவாஜி ரசிகர்களுக்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த உரைதளத்திற்கு அனைவரையும் அன்புடன வரவேற்கிறேன். முதலில் நம்முடைய மனதில் தோன்றும் எண்ணத்தைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். தமிழகத்தைப் பொறுத்த மட்டில் நடிகர் திலகத்தின் படங்களைத் திரையரங்குகளில் காண்பது மிகவும் அரிதாகி விட்டது. போலியான காரணங்களாலும் மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களினாலும் ஓடாத படங்களெல்லாம் ஓட்டப்படுவதாகத் தோன்றுகிறது. உண்மையிலேயே நல்ல வரவேற்பைப் பெற்றும் நடிகர்திலகத்தின் படங்கள் ஏன் திரையரங்குகளில் திரையிடப்படுவதில்லை. இதற்கு நாம் என்ன செய்யலாம்.விவாதிப்போமே.